Published on 31/07/2018 | Edited on 31/07/2018
பிரியா ஆனந்த் நடிப்பில் 'காயம்குளம் கொச்சுண்ணி' மலையாள படம் அடுத்து வெளியாகவுள்ள நிலையில் இவர் தற்போது தமிழில் 'எல்.கே.ஜி' படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்.ஜெ. பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா ஆனந்த் தன் திருமணம் குறித்து பேசியபோது.... "கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை. பாட்டி காலத்துல தான் ஒரு பொண்ணுனா கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணாமலும் சில பெண்கள் இருக்காங்க. நான் என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும், எப்படி இருக்கணும்னு முடிவு பண்ற பெண்களுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கு. சரியான ஒரு நபர் கிடைச்சா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா தனியாக இருப்பதே நல்லது" என்றார்.