பாஜக கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த அடாவடி சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. “ஜெய் ஸ்ரீராம்” என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டில் குறிப்பிட்ட சில பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்காக திரைத்துறை. வரலாற்று ஆய்வாளர்கள் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு பொது கடிதம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை ஏற்க வேண்டும் என்று என மணிரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா, அனுராக் காஷ்யப், அனுராதா கபூர் மற்றும் சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் கடிதம் எங்களுக்கு கோபத்தை கிளப்பியுள்ளது என்று இவர்களுக்கு எதிராக 62 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர். தில், பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரானவத், சினிமா தயாரிப்பாளர் விவேக் அக்னிகோத்தாரி, பல்லவி ஜோஷி, எழுத்தாளர் பிரசூன் ஜோஷி உள்ளனர்.
அக்கடிதத்தில், “கடந்த ஜூலை 23 ஆம் தேதி பிரமருக்கு எழுதிய கடிதம் ஒன்று எங்களை கோபம் கொள்ளச் செய்தது. 49 பேர் எழுதிய அந்த கடிதத்தில், அரசியல் சார்பும் தனிப்பட்ட முறையிலான நோக்கமும் இருந்தன. இது பிரதமர் நரேந்திர மோடியை எதிர்மறையாக சித்தரிக்கும் என்று நினைக்கிறோம். இன்று கடிதம் எழுதுபவர்கள் முன்னர் நக்சல் அமைப்பினரும், பழங்குடியினரும் விளிம்புநிலை மனிதர்களைத் தாக்கியபோதும் அமைதியாக இருந்தனர். பிரிவினைவாதிகள் காஷ்மீரில் பள்ளிகளை கொளுத்தும்போது அவர்கள் அமைதியாக இருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.