Skip to main content

“கடுமையான உடல்நலப் பிரச்சனையில் உள்ளேன்” - பவித்ரா லட்சுமி

Published on 23/04/2025 | Edited on 23/04/2025
pavithra lakshmi about her health condition

சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் தற்போது பயணித்து வருபவர் பவித்ரா லட்சுமி. தமிழில் நாய் சேகர், யூகி, ஜிகிரி ஜோஸ்து உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கடைசியாக பரத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்தார். இதனிடையே மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இது குறித்து விளக்கமளித்த பவித்ரா லட்சுமி, அத்தகவல் அனைத்தும் வதந்தி என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் இந்த வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், “என் தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து நிறைய ஊகங்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே இது குறித்து தெளிவுபடுத்தியும் வதந்திகள் நிற்கவில்லை. 

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன், நான் இதைச் செய்தேன், அல்லது அதை செய்தேன்... இப்படி ஆதாரமற்ற விஷயங்களைப் பரப்புவது உணர்ச்சியற்ற ஒரு விஷயம். சில கருத்துகள் மிகவும் மோசமானவை. அது குறித்து பேச விரும்பவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன். நான் கடுமையான உடல்நலப் பிரச்சனையில் உள்ளேன். அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். நல்ல பராமரிப்பிலும் இருக்கிறேன். உண்மையான அக்கறையுடனும் அன்புடனும் என்னைப் பற்றி கேட்ட அனைவருக்கும் நன்றி. 

அனைத்து ஊடகங்களிடமும் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்கள் பொழுதுபோக்குக்காக வதந்திகளைப் பரப்ப வேண்டாம். எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதன் எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும். ஏற்கனவே வாழ்க்கை கடினமாக இருக்கிறது. அதை மேற்கொண்டு இன்னும் கடினமாக்க வேண்டாம். நான் மீண்டு வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்