Skip to main content

கார்த்தி பட தலைப்பு ரகசியத்தை வெளியிட்ட பாண்டிராஜ்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
kar


தீரன் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இதில் இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பவானிசங்கர் நடிக்கிறார். கார்த்தியின் அப்பாவாக 60 வயது தோட்டத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் கதாபாத்திரத்தை பற்றியும், தலைப்பை பற்றியும் பாண்டிராஜ் பேசும்போது...."முதலில் 60 வயதுடையவராக நடிக்க சத்யராஜ் யோசித்ததாகவும், கதையின் முக்கியத்துவம் கருதி ஒப்புக்கொண்டதாக கூறினார்.  கார்த்தி இந்த படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஐந்து சகோதரிகளுடன் கடைசி ஆணாக கார்த்தி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்படும் இந்த படத்தில் கண்ணுக்கினியாள் என்ற கதாபாத்திரத்தில் சாயிஷா நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், மேலும் பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்" என்றார்.  இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'EIA விவகாரம்' தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி!- நடிகர் கார்த்தி!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

கச


மத்திய அரசு வெளியிட்டுள்ள 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020' வரைவு குறித்து பலரும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி சில வாரங்களுக்கு முன்பு வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

"நாடென்ப நாடா வளத்தன நடல்ல
நாட வளந்தரு நாடு”

 

என்று திருக்குளை உவமையாகக் குறிப்பிட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக அதிரடி காட்டினார். இவரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு நபர்களும் ஆதரவு தெரிவித்தினர். பா.ஜ.க. கட்சியினர் உள்ளிட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் சிலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்நிலையில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்த அன்பர்களுக்கு நன்றி என்று கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.