![oviya](http://image.nakkheeran.in/cdn/farfuture/3N_XPA35ih4V4IuavJNRG-keJlexoGcukAu8da75ayE/1533347666/sites/default/files/inline-images/oviya-1280.png)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பிறகு சிறுது காலம் ஓய்வில் இருந்த ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3, விமலுடன் களவாணி 2, சிம்பு இசை அமைக்கும் 90எம்.எல், ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஓவியா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து விளக்கமளித்த ஓவியா..."என்னைப்பற்றி யாரோ தவறான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறுவது தவறான தகவல். நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சொல்வதே இல்லை. களவாணி 2 படத்தில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்டதாகவும், இதனால் வேறு நடிகையை அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் வதந்தியை பரப்பிவிட்டார்கள். ஆனால், இப்போது அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன்.இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் நிறைய வெளிவருகின்றன. என்னைப் பொருத்தவரை நல்ல கதைகளைத் தான் எதிர்பார்க்கிறேன். முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. யாரிடமும் சம்பளத்தை அதிகமாக கேட்கவில்லை" என்றார்.