Published on 28/02/2025 | Edited on 28/02/2025

ஹாலிவுட்டில் 70 மற்றும் 80களில் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஜீன் ஹேக்மேன். நான்கு தசாப்தங்களாக சினிமாவிம் பயணித்த அவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதும் நான்கு கோல்டன் குளோப்ஸ் விருதும் வென்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த இவர் 2004க்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவர், கடந்த 26ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது மனைவி பெட்சி அரகாவா மற்றும் வளர்ப்பு நாயும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஜீன் ஹேக்மேனுக்கு 95 வயது அவரது மனைவிக்கு 63வயது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.