Skip to main content

இவர்களிடம் தப்பித்தது இந்த நடிகர் மட்டும்தான்...! தமிழ்ப்படம்2 சிங்கிள் பாடல் டிட்பிட்ஸ்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

தமிழ் படம் 2.O என்ற தமிழ் ஸ்பூஃப் படத்தின் டீசரை அடுத்து நேற்று 'நான் யாருமில்ல...' என்கிற தலைப்பில் ஒரு வீடியோ பாடல் யூ-ட்யூபில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியே தமிழகத்தில் 2010ஆம் ஆண்டு வரை வந்த அனைத்து படங்களையும் கலாய் கலாய் என்று கலாய்த்ததுதான். தமிழ்ப்படம் 2.O படம் ரிலீஸே ஆகவில்லை என்றாலும் தற்போது வந்த படங்களான 'டிக் டிக் டிக்' மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' வரை போஸ்டர் மற்றும் ட்விட்டரில் கலாய்த்தனர்.

 

siva intro



தமிழ் படம் முதல் பாகத்திலேயே முதல் இன்ட்ரோ பாடலான 'பச்ச...மஞ்ச...கருப்பு தமிழன் நான்' என்ற பாடல் அனைத்து மாஸ் நடிகர்களையும் கலாய்த்து மக்களை ஈர்த்தது. தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகத்தின் 'நான் யாருமில்ல' என்ற இந்த பாடலும் இன்ட்ரோ சாங் என்றுதான் சொல்கிறார்கள்.

"சுனாமியின் பினாமியே.... குள்ளநரிகளை ஒழிக்க வந்திருக்கும்  நல்ல..." என தொடங்கும் பாடலில்  "ஒரு ஆணியும் வேண்டாம்", என்று சிவா வாய்ஸ் வர அவரது இன்ட்ரோ காட்சிகள் நெருப்புகள் சூழ, AAA சிம்புவைப் போல  ஹேர் ஸ்டைலுடன் காட்சி தருகிறார். அடுத்து பாடல் வரிகளில் காமெடி ஏத்த, 'மாஸ் இல்ல, விளாசிட்டி இல்ல, வால்யூம் இல்ல, கிராவிட்டி இல்ல' என்று அறிவியல் பூர்வமாக கலாய்க்கின்றனர்.  இடையிடையே 'நெருப்புடா' என்பதைப் போல 'பருப்புடா' என்கிறார்கள்.

 

 


'பீட்டா வந்தா எனக்கு என்ன...
மீத்தேன் எடுத்தா எனக்கு என்ன...
எனக்கு மாஸ் ஓப்பனிங் வேணும் 
எனக்கு யூ சர்டிபிகேட் வேணும்'

என்று வரும் வரிகளில் 'அட்டகாசம்' படத்தில் தல அஜித்துக்கு எழுதப்பட்ட 'இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன... உனக்கென்ன' என்ற பாடலையும் அஜித்தையும் கிண்டல் செய்வதாக தோன்றவைக்கிறது.

'நீங்க நல்ல இருக்கணும் நாடு முன்னேற' என்ற பாடலை போட்டுவிட்டு பாட்டியை கொஞ்சுவது போன்ற காட்சியில் அப்படியே எம்.ஜி.ஆர் பக்கம் போய்விட்டு பின், 'வர்லாம் வர்லாம் வா' என்று சொல்லும் போதே தெரிகிறது அடுத்த கலாய் தளபதி விஜய்க்குத்தான் என்று. அப்போதே சைட் கேப்பில் முத்துராமலிங்கம் 'வரேன்மா' ஓவர்லாப் ஆகிறது.

  siva running



'நான் எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு தெரியாது... எதுக்கு வருவேன்னு தெரியாது' என்ற வரியைக் கேட்டால் குழந்தையே சொல்லிவிடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் கலாய்கிறார்கள் என்று. மேலும் இந்த வரியில் அவருடைய அரசியல் பிரவேசத்தையும் இழுத்து அப்டேட்டாக இருக்கிறார்கள். 'தானா சேர்ந்த கூட்டமில்லை, எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டு' என்று வகைதொகையில்லாமல் செல்கின்றன வரிகள். அதோடு விடவில்லை, 'என்ன வாழ வைத்தது தமிழ் பாலும் இல்ல... தெலுங்கு பாலும் இல்ல.... ஆவின் பால்' என்று ரஜினியையும், தமிழை வைத்து அரசியல் செய்பவர்களையும் சேர்த்து சீராக கலாய்கின்றனர்.

 

 


அடுத்து 'நீளமாக ட்வீட் பண்ண மாட்டேன், அரசியலில் குதிக்க மாட்டேன், தியானம் பண்ணமாட்டேன், எனக்கு  நடிக்க தெரியாது ,அப்பா சொல்லித்தரல' என்று வளைத்துக்கட்டி சினிமாவையும் அரசியலையும் பாடல் வரிகளால் பாடி (இல்ல படித்து) உள்ளார்.

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது... நான் யுஎஸ் கிளம்பிடுவேன்.... (இது பாடல் வரியாம் நம்புங்க) என்ற வரியில் கமலின் டிவி நிகழ்ச்சியும், அவர் விஸ்வரூபம் படத்தின் போது சொல்லியதையும் ஒரு காட்டு காட்டிவிட்டு  'நான் டிவில இருந்து வந்தவன்டா... என் ப்ரொடியூசருக்கு பாவம் காரே இல்லடா....' என்ற வரிகளில் சிவகார்த்திகேயன் ரெமோ பட வெற்றிவிழாவில் மேடையில் அழுததை நினைவுபடுத்திக் கலாய்க்கின்றனர்.  

  siva intro1



இத்தனை பேரை செய்துவிட்டு நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை விட்டால் எப்படி என்று 'என் உயிர் மூச்சு சங்கம்டா.... மண்டபம் கட்டிட்டுதான் என் கல்யாணம் டா....' என்கிறார். மீண்டும் ஒரு ரவுண்டு, 'நான் தலைவன் இல்லடா... அதுக்கு ஆசை இல்லடா.... ஒரு மன்றம் இல்லடா... அத கலைச்சிட்டேன்டா....' என்று ரிட்டர்னிலும் ஒருவரிடம் சென்று வருகிறார். நீங்களே இது யாருன்னு கண்டுபிடிச்சுருப்பீங்க... 

 

 


இறுதியாக, 'நான் ரொம்ப பேசித்தான் கைல காசே இல்லடா.... திரும்பி வந்துட்டேன், இப்போ கால் ஷீட்டே இல்லடா...' என்று மீண்டும் எஸ்.டி.ஆர் பக்கம் சென்று முடிகிறது இந்த பாடல். இப்பொழுது சினிமாவில் ஹாட்டாக இருக்கும் அத்தனை பேரையும் இழுத்துவிட்டிருக்கும் இந்தப் பாடலில் தப்பித்தவர் விஜய் சேதுபதிதான் போல... ஆனால், படத்தில் அவரது விக்ரம் வேதா காட்சியிருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அவ்வப்போது இப்படி ஒரு எண்டெர்டைன்மெண்ட் ரசிகர்களுக்கும் தேவைப்படுகிறது.                              


 

சார்ந்த செய்திகள்