ரஜினி காந்த் நடிப்பில் 2.0 படம் இன்று வெளியாகி, வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்திய சினிமா ரசிகர்கள் 2.0 படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பேட்ட என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸுடன் ரஜினி இணைய இருப்பதாகவும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.