
வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களின் வெற்றி கூட்டணியான அஜித், சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், தற்போது இன்னொரு புதிய வரவாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தம்பி ராமையா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். இவர் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு செய்தியாக விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது பின்னி மில்லில் பெரிய கிராமம் போல் செட் அமைத்துள்ளதனால் நடிகர் அஜித்குமார் வட சென்னை தாதாவா, அல்லது வீரம் படம் போல் கிராமத்து பின்னணியில் கொண்ட வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.