Skip to main content

சமந்தாதான் முதலில் விவாகரத்து முடிவை எடுத்தாரா? நாகர்ஜுனா விளக்கம்

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

nagarjuna explain samantha naga chaitanya fake news

 

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

 

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இது தொடர்பான ஒரே மாதிரியான விவாகரத்து அறிக்கையை நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.  இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. 

 

இதனைத்தொடர்ந்து, முதலில் சமந்தாதான் விவாகரத்து முடிவை எடுத்ததாகவும், அதன் பின்புதான் நாக சைதன்யா ஒப்புக்கொண்டதாகவும் பிரபல தெலுங்கு நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாக செய்திகள் வெளியாகின. 

 

இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா இது போலியான செய்தி என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சமந்தா மற்றும் நாக சைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்