Skip to main content

‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

pissasu 2

 

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

 

சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய ‘பிசாசு 2’ படக்குழு, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. பின், கரோனா இரண்டாம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த அறிவிப்பை இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளார். அதன்படி ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்