Skip to main content

கமல் நடித்த படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது!

Published on 23/06/2018 | Edited on 24/06/2018
rajkumar hirani


சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் 'சஞ்சு' படம் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது 'சஞ்சு' படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி. அடுத்ததாக 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 'லெஹராஹோ முன்னாபாய்' கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி இதுவும் மாபெரும் வெற்றிபெற்றது.

 

 


இதில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் தமிழில் கமல் நடிப்பில் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இதையடுத்து ராஜ்குமார் ஹிராணி இயக்கிய '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல் 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

 

sweta tiwari

 

 

அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.