Skip to main content

இப்படி ஒரு படம்... ஆஸ்கர் வரை சென்றிருக்கிறது!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
loving vincent



லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90வது ஆஸ்கர் விருது விழா நேற்று கோலாகாலமாக நடைபெற்றது. இதில் அனிமேஷன் படங்களுக்கான பிரிவில் தி பாஸ் பேபி, தி பிரட் வின்னர், பெர்டினாண்ட், லவ்விங் வின்சென்ட், கோ-கோ ஆகிய படங்கள் பரிந்துரையாகி, கோ-கோ திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களிலும் சற்று வித்தியாசமான அனிமேஷன் படமாக திகழ்ந்தது 'லவ்விங் வின்சென்ட்' திரைப்படம்தான். மற்ற அனிமேஷன் படங்களேல்லாம், காட்சிகள் முதலில் வடிவமைக்கப்பட்டு அதன் பின் கம்ப்யூட்டரில் அசைவுகள் கொடுத்து படம் முழுமையடையும். லவ்விங் வின்சென்ட் படமும் அதே முறையில்தான் எடுக்கப்பட்டது.


 

loving vincent1



ஆனால் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை ஆயில் பெயின்டிங் செய்து அதன் பின் அதற்கான அசைவுகளை கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் இது போல் உருவாக மற்றொரு காரணம், இத்திரைப்படம் வின்சென்ட் வான்கா எனும் ஓவியரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதுதான் முக்கியமான பகுதியாகும். இத்திரைப்படத்திற்காக 125 ஓவியர்கள் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் சுமார் 65000 பிரேம்கள் வரையப்பட்டு திரைப்படமாக்கப்பட்டன. இப்படி முழுமையாக ஓவியங்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதானாம். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. அகாடெமி விருதுகள் என்று அழைக்கப்படும் இந்த விருதுகளை கடந்த 1929ஆம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்டு சயின்ஸ் என்ற நிறுவனம். சினிமாத்துறையில் உள்ள பல்வேறு பிரிவினரைக் கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதுகள் கலை மற்றும் தொழில்நுட்பப்பிரிவு என 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

 

Sridevi

 

மிகவும் கோலாகலமாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும் விழாவில், சினிமாத்துறையில் சிறந்துவிளங்கி பல சாதனைகளைப் படைத்து தற்போது உயிருடன் இல்லாதவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

 

அப்போது, சினிமாத்துறையில் தமிழ்மொழியில் அறிமுகமாகி, பின்னர் பலமொழிகளில் நடித்து, இந்தி சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், ஜேம்ஸ் பாண்ட் புகழ் ரோஜெர் மூர், ஜோனத்தன் டிம்மி, ஜியார்ஜ் ரோமரோ, ஹாரி டீன் ஸ்டாண்டன், ஜெரி லூவிஸ், ஜோனி மொரீயு மற்றும் மார்ட்டின் லாண்டோ உள்ளிட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story

90வது ஆஸ்கர் விருது விழா - இந்தியப்படங்கள் பரிந்துரையில் இல்லை!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
oscar

 

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை(5.3.2018) காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் விழா நடைபெறுகிறது.   இந்தியப்படங்கள் எதுவும் பரிந்துரை பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.