Skip to main content

எஃப்.ஐ.ஆர். பதிய நீதிமன்றம் உத்தரவு... மாஸ்டர் தயாரிப்பாளருக்கு கிடுக்குப்பிடி...

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

master

'மாஸ்டர்' படப் பாடல் வெளியீட்டு விழாவில், நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்ற 5 படத்தின் 6 பாடல்களை சட்டவிரோதமாகவும் அனுமதி பெறாமலும் பயன்படுத்தியாக தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மீது சுவாமிநாதன் என்பவர் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இதனால், படத் தயாரிப்பாள சேவியர் பிரிட்டோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கபட்டது. ஆனால் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், இந்தப் புகார் தொடர்பாக மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

 

இது குறித்து NOVEX COMMUNICATIONS நிறுவனம் தரப்பில் கூறப்படுவது, “இந்திய அரசின் காப்புரிமை சட்டப்படி பொது இடங்களில் பயன்படுத்தப்படும் இசை மற்றும் பாடல்களுக்கு சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் முறைப்படி அங்கீகாரம் பெறவேண்டும். Think Music என்ற நிறுவனத்தின் பாடல்களின் உரிமம் Novex Communications நிறுவனத்திடம் இருக்கிறது. அந்தப் பாடல்களை உரிமம் பெறாமல் திரைப்படக் குழுவினர் இசை வெளியீட்டு விழாவில் பயன்படுத்தி உள்ளனர். இதனை ஒழுங்கு படுத்தவே சட்ட உதவியை அணுகியுள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்