Skip to main content

இளைஞர் காங்கிரஸ் போராட்டம்: ‘அம்மா’ அமைப்புக் கூட்டம் ரத்து!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

mohan lal

 

மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கம், 'அம்மா'. இந்த அமைப்பின் சந்திப்பு கொச்சியிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. மேலும் அந்த ஹோட்டல், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்தது. எனவே, விதிகளை மீறி இந்தச் சந்திப்பு நடத்தப்படுவதால் இளைஞர் காங்கிரஸ் தரப்பு இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

 

இந்த அமைப்பின் தலைவர் மோகன்லால் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து வீடியோ காலின் மூலம் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். ஆனால், ஒருசிலர் நேரடியாகச் சந்திப்பில் கலந்துகொண்டனர். பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகளும் இந்தச் சந்திப்பு குறித்து செய்திகள் ஒளிபரப்பியதால் அந்த ஹோட்டலின் வாசலில் கூடிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கினர். சிறிது நேரத்தில் காவல்துறை அங்கு வர, சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

 

அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் எடவேலா பாபு பேசுகையில், "குழு உறுப்பினர்கள் ஒரு சிலர்தான் வந்திருந்தனர். மற்ற அனைவரும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலந்துகொண்டனர். அந்தப் பகுதியில் தடை இருக்கிறது என்பது தெரிந்தவுடன் நாங்கள் உடனடியாகச் சந்திப்பை ரத்து செய்து இன்னொரு தேதிக்கு ஒத்திவைத்தோம். மேலும் அந்த இடம் கட்டுப்பாட்டு மண்டலம் என்பதே எங்களுக்கு நள்ளிரவுக்கு மேல்தான் தெரியவந்தது" என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்