நீண்ட நாட்களாக சாக்லேட் பாயாக இருந்து வந்த நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து தனது இரண்டாவது ரவுண்டை வெற்றியோடு ஆரம்பித்தார். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படமும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. படத்தில் மாதவனின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் இயக்க இருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகத்தில் மாதவன் நடிக்க இருக்கும் செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் நடிகர் மாதவனுக்கு திடீரென தோள் புறத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவர் படுக்கையில் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Published on 27/02/2018 | Edited on 28/02/2018