லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புற்று நோயிலிருந்து மீண்டவர்களுக்கு லியோ படத்தின் சிறப்புக் காட்சி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அதற்காக நன்றி தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது குடும்பத்தினருடன் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்த பில்ரோத் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் ஜே-வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
My hearty thanks to #Billrothhospital chairman Dr. Rajesh J for organizing a special screening for Doctors, staffs and Cancer Survivors along with their families 🤗🤗— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2023