Skip to main content

மீண்டும் இணையும் ‘கொம்பன்’ கூட்டணி?

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

karthi

 

கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'புலிக்குத்தி பாண்டி'. நேரடியாக சன் டிவியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், முத்தையா அடுத்து இயக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி, இயக்குநர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை ‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்கு முன்னதாகவே கார்த்தியிடம் முத்தையா கூறிவிட்டதாகவும், கார்த்தியின் கால்ஷீட் காரணமாக இப்படம் தாமதமாக தொடங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. தற்போது, இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முத்தையா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

முத்தையா - கார்த்தி கூட்டணியில் முன்னர் வெளியான ‘கொம்பன்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.     

 

 

சார்ந்த செய்திகள்