
2.0 படம் கோடை விடுமுறையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் தள்ளிப்போனது. இதனை சரிக்கட்டும் விதமாக ரஜினிகாந்துடைய மற்றொரு படமான காலாவை ஏப்ரல் 27 ஆம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. இதனால் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் காலா படம் ஒரே நேரத்தில் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனையடுத்து தெலுங்கு உரிமையை ரூபாய் 40 கோடிக்கு விற்பதாக பட நிறுவனம் அறிவித்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக காலா படம் இன்னும் விலை போகவில்லை. ஒரு டப்பிங் படத்தை 40 கோடி ரூபாய்க்கு வாங்க தெலுங்கு பட உலகில் யாரும் தயாராக இல்லை என்றும், இருந்தும் சில தயரிப்பாளர்கள் படத்தை 33 கோடிக்கு கேட்பதாகவும், அதற்கு வுண்டர்பார் நிறுவனம் ஒத்துவரவில்லை என்றும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.