Skip to main content

சமந்தா தரப்பு வைத்த கோரிக்கையால் டென்ஷனான நீதிபதி! 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Samantha Ruth Prabhu

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமந்தா -  நாக சைதன்யா தம்பதியின் விவகாரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக நடிகை சமந்தாவை நேரடியாகத் தாக்கி பலரும் பதிவிட்டுவந்தனர். அவையனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். மேலும், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் மீது மானநஷ்ட வழக்கும் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையின் போது நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, விசாரணையின் போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சமந்தாவின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் வழக்கு நடைமுறைப்படி விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். 

 

மேலும், பிரபலங்கள் பொதுத்தளங்களில் தங்களது தனிப்பட்ட விவகாரங்களைப் பகிர்ந்துவிட்டு, பின்னர் அவதூறு வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, அவதூறு வழக்கு தொடுப்பதற்கு பதிலாக சம்மந்தப்பட்ட நபர்களை நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்