
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா டீசர் வெளியாகி பல சாதனைகள் படைத்தது பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. ரிலீசான ஒரே நாளில் 90 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிக்கு ஒரே நாளில் இன்னும் பல மனதுக்கு நெருக்கமான சந்தோஷ நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கிறது. சிவாஜிராவாக இருந்தவரை ரஜினிகாந்த் என்று ஹோலி பண்டிகையன்று தான் பெயரை மாற்றினார் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். இதனால் தனது மனதுக்கு நெருக்கமான ஹோலி பண்டிகையை ரஜினி தனது வீட்டில் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் ரஜினியின் மனைவி, லதா ரஜினிகாந்த்தின் பிறந்த நாளும் நேற்றென்பதால் ஒரே நாளில் மூன்று மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை கொண்டாடிய ரஜினி திக்குமுக்காடி போனார். இந்த கொண்டாட்டங்களின் புகைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.