Skip to main content

ஐ.பி.எல். க்கு போகும் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் எச்சரிக்கை

Published on 10/04/2018 | Edited on 11/04/2018
gvprakash


தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து பெருமளவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடும் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களிலும், மறியல்களிலும் ஈடுபட்டு  வருகின்றனர். இதனால் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமதித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள் என பல கட்டுப்பாடுக்களை விதித்துள்ளது. இந்நிலையில் இதற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்...."அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..?" என்று பதிவிட்டு தன் எதிர்ப்பை காண்பித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்