Skip to main content

'அவருடன் நடனமாடியது மிகவும் சவாலாக இருந்தது' - ஜி.வி.பிரகாஷ் 

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
gv

 

'வாட்ச்மேன்' படத்தின் 'டோட்டோ' பாடல் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிபி பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மேலும் இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது....

 

 

"இந்த வெற்றி எங்கள்  கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன். அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது. உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது" என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்