தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கடந்த 2018ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். பின்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து தற்போது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கிறார். சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இப்போட்டியில் இந்தியாவின் பி-அணியில் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அந்தச் சந்திப்பில் பிரக்ஞானந்தாவிற்கு செஸ் போர்ட் ஒன்றையும், ராகவேந்திராரின் புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்கினார் ரஜினி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரக்ஞானந்தா தெரிவித்து, "மறக்க முடியாத நாள். ரஜினிகாந்த் அங்கிளை இன்று எனது குடும்பத்தினருடன் சந்தித்தேன். இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும் அவரது பணிவு ஊக்கமளிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா.
A day to remember!!! Met @rajinikanth uncle today with my family! Inspired by his humbleness despite reaching great heights! #Respect #Magizchi pic.twitter.com/Xfg2XUg5RD— Praggnanandhaa (@rpragchess) July 23, 2022