Skip to main content

"இந்தப் படம் பார்க்கும் அனைவரும் அம்மாவை மிஸ் பண்ணுவாங்க" - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

Gnanavel Raja

 

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று (16.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஏ. ஹரிகுமார் இயக்க, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவிற்கு அம்மாவாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். C. சத்யா இசையமைத்துள்ளார்.

 

ad

 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், "ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எப்போதுமே கமர்ஷியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களைத் தந்துவருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக்காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள். இருவரும் அவர் படத்தை ஒன்றாகத்தான் பார்ப்போம். ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்கக் கூடியவர். அவர் இடத்திலிருந்து எனக்கு சிறு பிரச்சனை கூட வரவில்லை. இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பைத் தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி ‘டாக்டர்’ படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதேபோல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள். யோகி பாபுவுக்கும் நாயகிக்கும் கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் பண்ணுவாங்க. இப்படம் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”என் படத்தை ரிலீஸ் பண்ணாதான் உனக்கு நல்ல நேரமே வரும்” - தயாரிப்பாளரை எச்சரித்த இயக்குநர் 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

gnanavel raja

 

'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குநரான டீகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'.  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் படம் ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி காட்டேரி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 

நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ”இயக்குநர் டீகேவிடம் இருந்து இரவு திடீரென மெசேஜ் வரும். என்னுடைய படத்தை ரிலீஸ் செய்தால்தான் உனக்கு நல்ல நேரமே வரும் என்றெல்லாம் என்னை எச்சரித்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நல்ல நேரம் வந்த பிறகுதான் இந்தப் படம் வெளியாகிறது. காட்டேரி படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும். இது திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம். சமீபத்தில் வந்த சில பேய் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனால், இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ரசிகர்களைக் கவர்ந்து, அவர்களுக்கு பிடிக்கக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 

படம் எடுத்து பல ஆண்டுகளான போதும் பொறுமையாக இருந்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி. அவர்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஸ்ரீலங்காவில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு க்ளைமேட் ரொம்பவும் சவாலாக இருந்தது. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு எல்லோருமே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நாங்கள் திட்டமிட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே படப்பிடிப்பை நிறைவுசெய்ய முடிந்தது என்றால் அது படக்குழுவினரின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமானது” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

தமிழகத்தில் இந்தி மொழி அரசியலாக்கப்படுகிறது... ஞானவேல் ராஜா

Published on 27/09/2019 | Edited on 27/09/2019
producer gnanavel raja



கோவையில் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா 27.09.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 
 

விழாவில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:- 
 

இந்தியை மத்திய அரசு திணிப்பதாக இல்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. இதனை தமிழகத்தில் அரசியலாக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகிறது.
 

தமிழகத்தில் 90 சதவித பேருக்கு இந்தி தெரியாததால்தான் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்.

 

producer gnanavel raja



 

 

பள்ளிகளில் இந்தி மொழி இருப்பது நல்லது. இங்கு இருக்கும் குழந்தைகள் புரிந்து கொண்ட அளவுக்கு, இங்கு உள்ள மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் எவ்வளவோ நல்லது. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கிறது. இந்தியை எல்லோரும் கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டியது வரும், மோடி பேசுவது புரிந்து விட்டால் நாமும் மாறிவிடுவோமோ என்ற ஒரு பதட்டமும், பயமும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது என்றார்.
 

இந்த விழாவில் பேசிய கஸ்தூரி ராஜா, பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்தியாவிற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். பிரதமர் மோடியால் இந்தியா காப்பாற்றப்பட்டுவிட்டது. இனி தமிழகம் மட்டும்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.