இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒரு மாத காலத்திற்கும் குறைவான நாட்களில் இப்படத்தை நடித்து முடித்துள்ளதால், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிம்புவின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், ஈஸ்வரன் படத்திற்கான இசை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டது என அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் நேற்று தெரிவித்தார். மேலும், எனது சினிமா வாழ்க்கையில் மிகக் குறைவான நாட்களில் இசையமைத்த இரண்டாவது படம் இது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, ஈஸ்வரன் படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். அதன்படி, இப்படத்தின் இசை, ஜனவரி மாதம் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை அறிந்து உற்சாகமான சிம்பு ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
WITH LOVE ONLY LOVE TO MY @SilambarasanTR_ ♥️ #Eeswaran Music is Coming to U ON #JAN2nd 2021 ?? pic.twitter.com/Rpa6SaRWx0
— thaman S (@MusicThaman) December 29, 2020