Skip to main content

ஹிட்டை தொடர்ந்து உடனடியாக தமிழில் களம் இறன்கும் துல்கர்....

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

துல்கர் சல்மான் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

dq

 

 

இந்த படத்தில் துல்கருடன் ரித்து வர்மா, ரக்‌ஷன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் உடனடியாக தமிழில் நடிக்கிறார் துல்கர். அதுகுறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் முதன் முதலில் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அந்த படத்தில்தான் துல்கர் ஹீரோவாக நடிக்க, காஜல் அகர்வால் மற்றும் அதிதிராவ் ஹைதாரி ஆகிய ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு ஹேய் சினாமிகா என்ற பெயரை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்