Skip to main content

பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட ‘டிராகன்’ பட இயக்குநர்

Published on 24/02/2025 | Edited on 24/02/2025
dragon movie director ashwath marimuthu said apologies letter to his parents

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் பெற்றோர் நேர்மை பற்றியும் பேசப்பட்டிருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகளவில் முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஷங்கர், நெல்சன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தற்போது தனது பெற்றோரை அறிமுகப்படுத்தி அவரிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இவர்கள்தான் என் பெற்றோர். மாரிமுத்து என்கிற தனபால். இதோ அவர் எங்கே போனாலும் போட்டுட்டு போர ஜோல்னா பைய். அம்மா சித்ரா. 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர் விரும்பிய மருத்துவராக இல்லாமல் ஒரு மோசமான இன்ஜினியரிங் மாணவராக இருந்து பின்பு நான் செய்த தவறுகளை உணர்ந்ததால் டிராகன் படம் நான் அவர்களிடம் கேட்கும் மன்னிப்பு” என்றார். 

படத்தில் கதாநாயகனின் பெற்றோர் பெயர்கள் அஷ்வத் மாரிமுத்து பெற்றோரின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அஷ்வத் மாரிமுத்துவின் அப்பா போட்டிருந்த ஒரிஜினல் ஜோல்னா பையைத் தான் படத்தில் கதாநாயகன் அப்பா கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் தகவல்.    

சார்ந்த செய்திகள்