Skip to main content

அஜித் பட இயக்குநரின் தந்தை கரோனாவால் மரணம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

ouhikhikh

 

பிரபல இயக்குநர் செல்வாவின் தந்தை பக்தவச்சலம் (85) இன்று (06.05.2021) காலை 7.15 மணியளவில் காலமானார். கரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

 

பொதிகை டிவியில் பரபரப்பாக பேசப்பட்ட ‘நீலா மாலா’, ‘சித்திரப்பாவை’ ஆகிய தொடர்களை இயக்கிய இயக்குநர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் ‘தலைவாசல்’. இதையடுத்து, இவர் அஜித்குமாரை ‘அமராவதி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ‘கர்ணா’, ‘புதையல்’, ‘பூவேலி’, ‘உன்னருகே நானிருந்தால்’, ‘ஜேம்ஸ்பாண்டு’, ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’, ‘நான் அவனில்லை’, ‘தோட்டா’ போன்ற 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இவர் தற்போது அரவிந்த் சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்