Skip to main content

"கல்விக் கடன் குறித்த அரசியல் பேசினாலும், கமர்ஷியலாக இருக்கிறது" - இயக்குநர் பா. ரஞ்சித்

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

director pa ranjith talk about college road film

 

பா.ரஞ்சித்தின் 'கபாலி' , 'கஜினிகாந்த்', 'குண்டு', 'வி1' 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். இவர் தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதன்படி, அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கும் ’காலேஜ் ரோடு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக பிரச்சனைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்புடன் 'காலேஜ் ரோடு' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.பி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க ஆப்ரோ இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

 

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் லிங்கேஷை பாராட்டியிருக்கிறார். அத்துடன் மாணவர்களின் கல்விக் கடன் குறித்த அரசியல் பேசினாலும் கமர்சியலாக இருக்கிறது, மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்