செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் பெரும் பொருட்செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ஜெயரம் ரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிறது.
தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டுதான் இப்படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இந்த நாவலை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் முயற்சி நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. சோழர்காலத்தை திரையில் தத்ரூபமாக காட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக பெரும் பொருட்செலவு ஏற்படும். இந்த நிதி பற்றாக்குறையாலே தள்ளி தள்ளி போகிறது இப்படம்.
தற்போது மணிரத்னம் இதை எடுத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் வேலை செய்வதால் இது நிறைவேறிவிடும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பொன்னியின் செல்வனை போல ‘வேள்பாரி’ என்னும் சரித்திர நாவல் ஒன்று இருக்கிறது. இந்த நாவலை எழுதியவர் சு.வெங்கடேசன். இவர் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியின் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிடுபவர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் இடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சரித்திர கதையில் நடிக்க வேண்டும் என தனுஷ் ஆசைப்படுவதாகவும். அதனால வேள்பாரி கதையை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.