வேலைக்காரன் வெற்றியை தொடர்ந்து தற்போது 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை சிவகார்திகேயனுக்காக இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக சமந்தாவும், வில்லியாக சிம்ரனும் நடிக்கின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணிக்கு இசையமைக்கும் டி இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில், சீமராஜா படத்திலும் பொன்ராம், சிவகார்த்திகேயனுடன் பணியாற்றுவது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். இந்த படத்திலும் மனதை கொள்ளையடிக்கும் ஒரு மெலடி பாடல் இடம்பெறுவதாகவும், எப்போதும் ஒரு மெலடி பாடலுக்கு தன் படத்தில் இடம் தரும் பொன்ராமிற்கு நன்றி கூறியும், மேலும் அந்த பாடலை நமது பாடும் பறவையான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.