Published on 29/11/2018 | Edited on 29/11/2018
Three cheers to team #2.0 .... The magnificent day has arrived !!
— Rajinikanth (@rajinikanth) November 28, 2018
2.o படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. இந்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்றுதான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவில் அதிக தொகை செலவிட்ட படமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று 2.o படம் வெளியாகியுள்ளது.
இப்படம் வெளியானது குறித்து ரஜினி காந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “ 2.O படக்குழுவினர்களுக்கு மூன்று சியர்ஸ்... அற்புதமான அந்த நாள் வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.