ஆண்டாளை மையப்படுத்தி எடுத்த அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் படம் இன்று வெளியாகி தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அனுஷ்கா, நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்களில் வைரமுத்து ஆண்டாளின் பெருமைகளை உணர்ந்தவர் உயர்த்தியவர் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர் இதை பற்றி பேசுகையில்...."படம் பெருமாள் வரலாறு ,அவர் மீது பக்தி கொண்டவரின் பக்தி பற்றி அழகாகச் சொல்கிற படம். இது ஆந்திராவில் ஓடி வெற்றி பெற்ற பக்தி மணம் கொண்ட பிரமாண்ட வெற்றி படமாகும். படத்தையே பார்க்காமல் விளம்பரத்துக்காக வழக்கு போட்டுள்ளதால் படத்துக்குப் பிரச்சினை எழுந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. இப்படி விளம்பரம் தேட வழக்கு போடுகிறவர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும், உறவினரோடும், ஊர்க்காரர்களோடும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்த்து விட்டு ஆண்டாளைப் பற்றி தவறாக எதுவும் உள்ளதா என தெரிந்து கொள்ளட்டும்” என்றார் படத்தின் தயாரிப்பாளர்.