நடிகை ரித்விகா, பரதேசி, மெட்ராஸ் மற்றும் கபாலி போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார். பின்னர், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100 நாட்கள் பங்கேற்று, மக்கள் மத்தியில் ஆதரவையும் பெற்று பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றார். இவர் இந்த டைட்டிலை பெற்றவுடன், சிலர் ரித்விகா என்ன சாதி என்றும், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் பிக்பாஸ் டைட்டில் கிடைத்துள்ளது என்று சமூகவலைதளத்தில் விமர்சித்து சர்ச்சையை கிளப்பினர்.
இது போன்று சர்ச்சையை பரப்பியவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் ரித்விகா ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், “ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..” என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.