Skip to main content

‘அரசியல் வேண்டாம்... ப்ளீஸ்’- ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடத்த உள்ள இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில்  5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. 
 

rahman

 

 

தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய இசை துறையில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற இவர் சினிமா மட்டுமில்லாமல் வெவ்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 
 

 இதன் தொடர்ச்சியாக  இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை YMCA-யில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளார் ரஹ்மான். முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சி தனியார் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி சதிஷ் தயாரிக்கிறார். இந்த இசை நிகழ்ச்சிக்கான இணைய டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரே நாளில்  5000 டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில், ஊர்வசி பாடல் மெட்டுக்கு ஏற்றார்போல் புதுமையான வரிகளை எழுதி அனுப்புமாறு ரஹ்மான், ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் கேட்டுள்ளார். அதில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊர்வசி பாடலுக்கு புதுமையான வரிகளை தந்தீர்கள். அந்த கற்பனை திறன் மிக்க வரிகளை பயன்படுத்தி நாங்களும் புது ஊர்வசி பாடலை மேடையில் பாடிக்காட்டினோம். அதைபோலவே இந்த முறையும் ஊர்வசி பாடலுக்கு புதுமையான பாடல் வரிகளை எழுதி அனுப்புங்கள். நாங்கள் மேடையில் பாடுகிறோம். அரசியல் வேண்டாம். ப்ளீஸ்.”என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்