Skip to main content

ஏ.ஆர் முருகதாஸ், கௌதம் கார்த்திக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

AR Murugadoss, Gautam Karthik movie First look released

 

ஏ.ஆர் முருகதாஸ், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 'தர்பார்'. ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனிடையே 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

 

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘1947- ஆகஸ்ட் 16' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர் முருகதாஸின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். 
 

இப்படத்தை பற்றி இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களை சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். 

 

 


  

சார்ந்த செய்திகள்