Published on 13/02/2018 | Edited on 14/02/2018

பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், வருடாவருடம் காதலர் தினத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டு வருகிறார். அதில் `எனக்கென யாரும் இல்லையே', `அவளுக்கென்ன', `ஒன்னுமே ஆகல' உள்ளிட்ட ஆல்பம் பாடல்களை ஒவ்வொரு காதலர் தினத்தன்று வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில், வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை முன்னிட்டு ஜூலி என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடப் போவதாக அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பாடலை போடா பொடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். மற்றும் சோனி மியூசிக் அந்த பாடலை வெளியிடுகிறது.