
அஜித் சினிமாவை தாண்டி கூட இருக்கும் சக நடிகராகட்டும், நண்பர்களாகட்டும் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். நன்றாக உபசரித்து உணவு பண்டங்கள் சமைத்து சாப்பிடவைத்து அழுகு பார்ப்பார் என்று பல சினிமா நட்சத்திரங்கள் சொல்லி பார்த்திருக்கிறோம். இது இப்படி இருக்க நாம் எவ்வுளவு உயரத்தில் இருந்தாலும் தன் குடும்பம் என்று வந்தால் மிகவும் எளிமையாகவும், பிள்ளைகளுக்காகவும் அவர் செலவிடும் நேரத்தை அவ்வப்போது நாம் வீடியோவாகவும், போட்டோவாகவும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் கார், பைக் ஓட்டுவதில் ஜாம்பவனான அஜித், தன் மகளுக்காக டயர் ஒட்டி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்துக் கொண்ட அஜித் தன் மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.