சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித், சிவா கூட்டணியில் உருவாகும் படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற குழப்பம் வெகு நாட்களாக நீடித்த நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இதையொட்டி படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு எப்போது அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் டி.இமான் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி.இமானுக்கு டுவிட்டரில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அப்படி இவர் இசையமைக்கும் பட்சத்தில் அஜித், இமான் இணையும் முதல் படம் இதுவாகும். மேலும் டி இமான் இசையமைப்பதை பற்றி அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.