
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து த்ரிஷாவின் கதாபாத்திர அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாக தெரிவித்து சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனின் தனது முதல் இருந்து கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ரம்யா என்ற பெயரையே சூட்டி வருகிறார். முதல் படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஆனந்தி கதாபாத்திரம் அடுத்தடுத்த படங்களான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, பஹிரா மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் தமன்னா, அமைரா தஸ்தூர், ரிது வர்மா ஆகியோரின் கதாபாத்திரம் ரம்யா என்ற பெயரே வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செண்டிமெண்டை தற்போது குட்-பேட்-அக்லி படத்திலும் தொடர்கிறார்.
Welcome to the world of GBU Maamey @trishtrashers mam as Ramya 💥 See you all on April 10 th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 #GoodBadUgly pic.twitter.com/43dnjv9fNG— Adhik Ravichandran (@Adhikravi) February 22, 2025