Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு... கூலிப்படையை ஏவி அண்ணனை கொலை செய்த நடிகை!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

shanaya katwe

 

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒர் ஆணின் சடலம் கிடந்தது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள், கேஷ்வாப்பூர் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் மிஸ் கர்நாடக அழகியும் நடிகையுமான ஷான்யா காடவேயின் சகோதரர் ராகேஷ் என்பது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக முதற்கட்டமாக நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நடிகை ஷான்யா காடவே, தன்னிடம் மேலாளராக பணியாற்றி வந்த  நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷான்யா காடவே சகோதரர் ராகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகேஷ் உயிரோடு இருக்கும்வரை தங்களது காதலுக்கு சம்மதிக்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்த ஷான்யாவும் நியாஜ் அகமதும் கூலிப்படையை ஏவி ராகேஷை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.

 

இவர்களிடம் பணம் பெற்ற ஒரு கூலிப்படை கும்பல், கடந்த 9ஆம் தேதி ராகேஷை காரில் கடத்தி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு, ராஜேஷின் தலை மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்த கும்பல், அதனை உப்பள்ளி பகுதியின் பல்வேறு இடங்களில் வீசிவிட்டுச் சென்றுள்ளது. இது தொடர்பாக முதற்கட்டமாக நியாஸ் அகமது, தவுசிப் சன்னாபூர், அல்தாஃப் முல்லா, அமன் கிரானிவாலே ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நடிகை ஷான்யா காடவேவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தங்கையே கூலிப்படையை ஏவி அண்ணனைக் கொன்ற சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்