Skip to main content

வயநாடு சோகம் - களத்தில் உதவி வரும் பிரபல நடிகைக்குப் பாராட்டு!

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
actress nikhila vimal helped for wayanad landslide

கேரளாவில் பெய்ந்த பலத்த கனமழையால் வயநாடு மாவட்டதிலுள்ள முண்டக்கை மற்றும்  சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று (30.07.2024) பயங்கர நிலச்சரிவு எற்பட்டது. அதில் தற்போது வரை 163-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.  

ad

இச்சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் சினிமா உச்ச நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அம்மாநில அரசு பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளிக்க (keralacmdrf@sbi) என்ற யூ.பி.ஐ-யை அறிமுகம் செய்துள்ளது. 

மேலும் மலையாள சினிமாத்துறையில் உள்ள பலர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் எந்தெந்த பகுதியில் மீட்பு பணிக்குழு அமைத்த கூடாரங்கள் உள்ளது என்றும் நிவாரணப் பொருட்கள் எந்தெந்த பகுதியில் தருகிறார் என்றும் தொடர்ந்து ஆன்லைனில் அப்டேட் செய்தும் வருகின்றனர். சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று உதவி வருகின்றனர்.

actress nikhila vimal helped for wayanad landslide

அந்த வகையில் கேரளாவின் டி.ஒய்.எஃப்.ஐ என்ற அமைப்பு தொடர்ந்து பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட், குடி தண்ணீர், அரிசி, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது. அந்த அமைப்புடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு நடிகை நிகிலா விமலும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவரை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். 

சமீபத்தில் இவர் விபின் தாஸ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தில் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்