
‘அம்மினி பில்லா’, ‘மழமேகப்ரவுள்’, ‘ரமணம்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்திருப்பவர் ஜனார்த்தனன். ‘முத்தப்பன்’ என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்த ஜனார்த்தன், திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூடப்பட்டு இருந்த வலை திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள திரைப்பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.