Published on 03/12/2022 | Edited on 03/12/2022

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்ததில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.