Skip to main content

25 ஆண்டுகள்... விடாது கருப்பு; ஒன்றுகூடிய மர்ம தேசத்தினர்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

25 years Vidathu Karuppu celebration

 

மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பழங்கால சுவராசியமான த்ரில்லர் தொடரான மர்மதேசம் ரகசியம், விடாது கருப்பு, சொர்ணரேகை, இயந்திர பறவை, எதுவும் நடக்கும் என பல பகுதியாக வெளியிடப்பட்டது. இதில் கருப்பசாமி என்ற கற்பனைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’விடாது கருப்பு’ தொடர் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம். அதில் வரும் கருப்பசாமியை அந்த காலத்திலேயே நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தனர். 

 

இந்நிலையில் இந்த தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதில் நடித்த சேத்தன், தேவதர்ஷினி, பொன்வண்னண், விஜய் சாரதி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து  கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் விஜய் சாரதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்