தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மார்க் குறைவாகப் பெற்றதைக் கண்டித்து திட்டியதால் வீட்டை விட்டு ஓடிபோன மாணவனின் செயலைக் கண்டு மனமுடைந்த டீச்சருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு டீச்சர் கவுன்சிலிங்கிற்காக என்னிடம் வந்தார். ஒரு வகுப்பில் உள்ள 40 பேரும் செண்டம் எடுக்க வைத்தால் அவர் தான் பெஸ்ட் டீச்சர் என்றெல்லாம் விதிகள் இருக்கிற ஸ்கூலில் மேக்ஸ் டீச்சராக அவர் வேலை பார்க்கிறார். அதன்படி, குழந்தைகளை எப்படியாவது மார்க் வாங்கி செண்டம் எடுக்க வைக்க, இந்த டீச்சர் பிரஸர் செய்ய ஆரம்பிக்கிறார். அதில் ஒரு பையன், இந்த பிரஸர் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.
மேக்ஸில் 92 மார்க் வாங்கியும், செண்டம் ஏன் எடுக்கவில்லை என ஸ்கூலிலும், வீட்டிலும் பிரஸர் கொடுத்ததால் அதை தாங்க முடியாமல் பையன் வீட்டை விட்டு ஒருநாள் ஓடிப்போகிறான். இதனால், அன்று முழுவதும் இந்த டீச்சர் குற்ற உணர்ச்சியால் மனமுடைந்து போகிறார். மாலை வரை வீடு திரும்பாததால், போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்து அதன் பிறகு அவனை சேலத்தில் இருந்து சென்னையில் கண்டுபிடிக்கிறார்கள். பையனை வீட்டுக்கு கொண்டு வந்த போது அவனது பெற்றோர்கள் அடித்து வீட்டில் இருக்க வைக்கிறார்கள். இந்த டீச்சர் அந்த பையனிடம் பேசிய போது, அம்மா அப்பா சொன்ன போது நான் கண்டுக்கவில்லை. ஆனால், நான் நல்லா படிக்கிற பையன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், செண்டம் எடுக்கவில்லை என்பதால் நான் எதற்கும் பிரயோஜனம் இல்லை நீங்கள் சொன்ன போது தான் ஓடிப்போக முடிவு செய்து போனேன் எனச் சொல்கிறான்.
ஒரு பக்கம் 11ஆம் வகுப்பு படிக்கும் மகள், நச்சரிக்கும் கணவர், வயதான பெற்றோர், இன்னொரு பக்கம் மார்க் எடுக்க வைக்க பிரஸர் கொடுக்கும் ஸ்கூல் மேனேஜ்மெண்ட், இன்னொரு பக்கம் என்னை அறியாமலே 100 சதவீத மார்க் எடுக்க வைக்க வேண்டும் என்ற ஈர்ப்பு இருக்கிறது. இதுயெல்லாம் சேர்ந்து 92 மார்க் எடுத்துக்கொண்டிருந்த பையனை செண்டம் ஏன் எடுக்கவில்லை எதற்கும் பிரயோஜனம் இல்லை எனச் சொல்ல வைத்துவிட்டதே என அவர் மனமுடைந்து என்னிடம் சொன்னார். நானும் ஒரு பெண்ணுக்கு அம்மா தானே, எனக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எப்படி இருந்திருக்கும்? இது ஏன் எனக்கு தெரியாமல் போனது? என்ன சரிசெய்யனும் எனக் கேட்டார்.
மகள், கணவன், பெற்றோர் இதையெல்லாம் தவிர்க்க முடியுமா எனக் கேட்டபோது முடியாது எனச் சொன்னார். மேனேஜ்மெண்டில் தான் பிரச்சனை வருகிறது. எந்த ஸ்கூலில் அதிகமாக மார்க் வருகிறதோ அந்த ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் வரை மேனேஜ்மெண்ட் இப்படி தான் இருக்கும். அதனால், மேனேஜ்மெண்டை மாற்ற முடியாது. குடும்பம், மேனேஜ்மெண்ட், பள்ளி எதையும் மாற்ற முடியாது. ஆனால், உங்களால் மாற முடியுமா எனக் கேட்டதற்கு முடியும் என்றார். வகுப்பு எடுக்கும்போது ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் என்ன செய்வீர்கள்? என அவரிடம் கேட்டேன். ஆரம்பிக்கும் போது ஃபுல் போகஸ் வேண்டுமென்பதற்கு எல்லோரையும் அமைதியாக்கிய பின்பு தான் வகுப்பைத் தொடங்குவேன். அதே போல், முடிக்கும் போது இந்த கணக்கிற்கு உண்டான மார்க்கை எடுக்கவில்லை என்றால் உங்களை சும்மா விடமாட்டேன் எனச் சொல்லிவிட்டு தான் கிளம்புவேன் எனச் சொன்னார். வகுப்பில் அவர் என்ன செய்வாரோ அதே மாதிரி தான் என்னிடம் செய்ய சொன்னேன்.
இனிமேல் வகுப்பை ஆரம்பிக்கும் போது மாணவர்களை அமைதியாக்கிய பின்பு, இந்த வகுப்பில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலமும் மார்க் இல்லாமல் கவனிக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஆனால், இந்த உலகம் மார்க்கை வைத்து தான் முதலில் உங்களை பார்க்கிறது. அதன் பின்பு, வாய்ப்பு கொடுக்கிறது. அதன் பிறகு திறமையை பார்க்கிறது. திறமையை பார்த்ததும் மார்க்கை பார்ப்பதில்லை. எனவே, மார்க் என்பது விசிட்டிங் கார்ட், எண்ட்ரி டிக்கெட் மாதிரி தான். அதனால், அடுத்த 40 நிமிடம் உங்களுக்கான எண்ட்ரி டிக்கெட்டை பற்றி தான் பாடம் எடுக்க போகிறேன் என்ற தொனியில் வேற வேற சொல்ல வேண்டும் என அவரிடம் சொன்னேன். அதே போல் முடிக்கும் போது, 1000 மார்க்கு 990 மார்க் எடுத்தால் நீட் இல்லாமல் மெடிக்கல் சீட்டு இல்லை. அதே, 1000க்கு 990.01 மார்க் எடுத்தால் மெடிக்கல் சீட் உண்டு. அப்படியென்றால், 990க்கு வேல்யூ 0 தான். .01 வேல்யூ லட்சம் அல்லது கோடி என சிஸ்டம் சொல்கிறது என மாணவர்களிடம் சொல்லுங்கள் எனச் சொன்னேன். நீங்கள் 700 மார்க் எடுத்தாலே எனக்கு சந்தோஷம் தான் ஆனால், நீங்கள் 990 மார்க் எடுத்தாலே உங்களை இந்த உலகம் ரிஜெக்ட் செய்கிறது. அவ்வளவு போட்டி இருக்கிறது எனவே, கவனம் கொண்டு படியுங்கள் என்பதை வேறு வேறு மாதிரி வகுப்பு முடியும் போது சொல்லுங்கள் என்றேன்.
சில நாட்கள் கழித்து அவர் என்னை பார்க்க வந்தார். மாணவர்கள் முன்னே எடுத்த மார்க்கையோ அல்லது முன்பின் மார்க்கையோ எடுக்கிறார்கள். நான் இதை செய்த பிறகு சிரித்துக்கொண்டே எடுக்கிறார்கள் எனச் சொன்னார். மார்க் எடுத்தாலும், எடுக்கவில்லையென்றாலும் எனக்கு நீ பிள்ளைகள் தான் என்ற டீச்சரின் வரிகள் தான் அவனை ஆஸ்வாசப்படுத்துகிறது.