Skip to main content

11 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் போட்டி... ரசிகர்கள் பேரார்வம்!!!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

இந்திய கிரிக்கெட் அணி விராத் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதற்கட்டமாக அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 போட்டிகள் இந்தியா விளையாடுகிறது. 

 

india squad



 

 


இன்று இந்தியாவுக்கும், அயர்லாந்துக்கும் டப்ளின் நகரில் முதல் டி20 நடைபெறுகிறது. இதற்காக கடந்த சனிக்கிழமையே இந்திய அணி டப்ளின் வந்தடைந்தது. இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

அயர்லாந்து அணி கேரி வில்சன் தலைமையில் இந்திய வீரர்களுக்குச் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் நம்பிக்கை வீரர்களான வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரைன் ஆகியோரும் உள்ளனர். இந்திய வம்சாவளியான சிம்ரஞ்சித் சிங்(31) அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளராவார். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

2007 ஆம் ஆண்டு பெல்பாஸ்ட் நகரில் இந்தியவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரேயொரு, ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு 11 வருடங்கள் கழித்து இன்று இந்திய அணி அயர்லாந்துடன் விளையாட இருக்கிறது. இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே நான்கு போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளும், ஒரேயொரு டி20 போட்டியும் அடக்கம். இவை அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது.