Published on 20/02/2019 | Edited on 20/02/2019

கடந்த 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகினர். இதனை அடுத்து பாகிஸ்தான் நாட்டுடன் இந்தியா கிரிக்கெட் கூட விளையாடுவதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும். உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை. பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும். இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.