![C](http://image.nakkheeran.in/cdn/farfuture/y26Iy5oRLXmGiKCUpccoubRPJdm2Rz0lIpUMqkOJBXY/1700212463/sites/default/files/inline-images/Dr%20c.jpg)
நோய்களை மருந்து கொண்டும் சரி செய்யலாம். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துதான் குணப்படுத்த முடியும். அந்த வகையில் குடல் இறக்கம் பற்றி பிரபல டாக்டர் சந்திரசேகர் சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.
குடல் இறக்கம் என்பது குடல் இயல்பான இடத்திலிருந்து இறங்கி விரைவீக்கம் ஆகுமளவிற்கு ஆவதாகும். இது ஒரு வகை. மற்றொரு வகை அதிகப்படியாக எடை தூக்குவதால் வயிறு இறுகி குடல் இறக்கம் ஏற்படும். உடற்பயிற்சி நிலையங்களில் பலர் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிக எடையை தூக்கினால் குடல் இறக்கம் ஏற்படும். குடலின் பலகீனமாக பகுதியில் எடை அதிகத் தன்மையால் குடல் வெளியில் வந்து விடும். அது ஒரு வகை குடல் இறக்கம் ஆகும்.
நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், அதிகப்படியான பளு தூக்கி வேலை செய்தல், நின்று கொண்டே அதிகப்படியான அழுத்தம் தந்து வேலை செய்வது இவர்களுக்கெல்லாம் வயிற்றில் பிரசர் அதிகமாக போகும். இது வேலை சார்ந்த நோய்தான் என்பதையும் மனதில் கொள்க.
குடல் இறக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப நிலையில் முழு ஓய்வு எடுத்தாலே உடலே தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஆனால் ஓய்வு எடுக்கவே விரும்பாத பரபரப்பான உலகத்தில் குடல் இறக்கத்தை கவனிக்காமல் விட்டு சிலருக்கெல்லாம் குடல் இறங்கி முட்டி வரை வந்து அறுவை சிகிச்சை எல்லாம் செய்திருக்கிறோம். அந்த அளவுக்கு கவனிக்காமல் விட்டவர்களெல்லாம் உண்டு.
குடல் இறக்கம் வராமல் தடுப்பதற்கு அதிகப்படியான உடல் எடை தூக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அல்லது உங்கள் எடைக்கும் அதிகமான எடையை தூக்காமல் இருப்பதே நல்லது. பாடிபில்டிங், வெயிட் லிப்டிங் போன்று அதிகமான எடை தூக்கி பழகுகிறவர்கள் எடுத்த உடனேயே அவ்வளவு எடையை தூக்க மாட்டார்கள், கொஞ்சம் கொஞ்சமாக எடை தூக்குதலுக்கு உடலைப் பழக்கி அதன் பிறகு தூக்குவார்கள். எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது. புரதம் சார்ந்த உணவு வகைகளை உணவில் எடுத்துக் கொள்வதால் குடல் இறக்கம் நடைபெறாது. புகைப்பழக்கத்தை, ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். குடல் இறக்கம் நோயின் தன்மை அதிகமானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும் என்றால் அதை தள்ளிப்போடக்கூடாது.